பாஸ்கரா ஜோதிட உலகிற்கு உங்களை வரவேற்கின்றோம்

ஜோதிடம் என்றால் என்ன?
வானில் பூமிக்கு அருகாமையில் சுயமாக பிரகாசிக்கக் கூடிய நட்சத்திரத்தை சூரியன் என்று அழைக்கின்றோம், இந்த சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால் தனது குடும்பத்தில் உள்ள கோள்களுடன் சேர்ந்து, வானமண்டலத்தில் நீள் வட்டப் பாதையில் அமைந்துள்ள பால்வெளியில் சூரியன் வலம் வருகின்றது இதனால் ஜோதி இடம் பெயர்வதை ஜோதிடம் என்று பராசரர் காலத்திலிருந்து கூறப்படுகிறது.
இதையே நாம் நடைமுறையில் நமது பூமிக்கு நேர் கிழக்கில் உதயமாகும் புள்ளியை இலக்னம் என்கிறோம். அதாவது சூரியன் பால்வெளிப் பாதையில் ஒரு பாகையை கடந்து செல்ல 4 நிமிடத்தில் கடந்து செல்கின்றார். இவ்வாறு 360 பாகையில் ஒரு குறிப்பிட்ட பாகையிலிருந்து சுற்றி மீண்டும் அதேபாகையை வந்தடைய 23 மணி 56 நிமிடத்தில் சூரியன் பால்வெளி பாதையில் உள்ள நட்சத்திர கூட்டங்களை கடந்து செல்கிறது, இதையே இலக்ன நட்சத்திரம் என அழைக்கின்றோம்.
சூரியன் ஒரு நாளில் 23 மணி 56 நிமிடத்தில் அதே பாகைக்கு வந்தடையும் அதே வேலையில் தனது பயண ஆரம்ப அச்சிலிருந்து ஒரு பாகை முன்னோக்கி நகர்ந்து செல்கிறது. இதைத்தான் நாம் நட்சத்திர ஓராமணி என்கிறோம்
முன்னோக்கி நகரும் ஒரு பாகைக்காண காலஅளவு 4 நிமிடமும் சேர்த்து 24 மணி என்கிறோம்.
பால்வெளி பாதை நீள்வட்டமாக அமைந்திருப்பதால் ராசிமானத்தை 12 பகுதியாக பகுக்கும் போது இவைகள் சம அளவுகளில் அமைவதில்லை, நீண்ட ராசி மற்றும் குறுகிய ராசிகளாக அமைந்து வௌ;வேறான அளவுகளில் அமைவதால், நீண்ட ராசிகள் 32 பாகை வரையிலும், குறுகிய ராசிகள் 28 பாகை வரையிலும் அமைவதால் லக்ன பிரமாண இடைவெளி நேரங்கள் மாறுபடுகின்றது 12 இலக்னமும் 2 மணி நேரம் சமகால இடைவெளியில் அமைவதில்லை, வௌ;வேறான நேரங்களில் அமைகின்றது.
சூரியனை பூமி ஒரு நாளில் 360 பாகையை மிக விரைவாக ஒரு சுற்று சுற்றி வருவதின் அடிப்படையில் இலக்னம் கணிக்கப்படுகிறது.
ஜோதியாகி சூரியன் இடம் பெயர்வை நாம் ஜோதிடம் என்று அழைக்கின்றோம்.
ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
நமது முன்னொர்கள் வாணவியல் மாற்றங்களால் பூமியில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை ஆய்வு செய்யத் துவங்கினார்கள், அது காலப்போக்கில் பல உட்பிரிவுகள் நிகழ்ந்தன.
1) வாணவியல் சாஸ்த்திரம், இது வாணவெளியில் ஏற்படும் நிகழ்வுகளை பற்றி ஆய்வு செய்யப் பயன்படுகிறது.
2) மண்டென் ஜோதிடம், இது வாணவெளி மாட்றங்களால் ஒவ்வொரு நாட்டிற்கும் என்ன நிகழ்வுகள் நடைபெருகின்றது அதாவது விவசாயம், போர், பஞ்சம், தொற்று நோய், இயற்கை சீற்றங்கள் பேன்றவைகளை ஆய்வு செய்யப் பயன்படுகிறது.
3) ஆரூட ஜோதிடம், இது ஒரு தனிப்பட்ட விசயங்கள் அன்டை நாட்டுடன் போர்புரிய, அன்டை நாட்டினரால் ஆபத்து, கோவில் திருவிழாக்கள், யாகங்கள், அரசனை தேர்வுசெய்தல், என்ன பயிர் செய்வது என்பதைப்பற்றிய ஆய்வு செய்யப் பயன்படுகிறது.
4) ஜாதகம் என்பது ஒரு தனிமணிதனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களைப்பற்றிய சாதக பாதகங்களை அறிய வசதி படைத்தவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தனர்.
5) ஜாதகம் இல்லாதவர்களுக்காக பிரசன்னம் என்ற முறையை பயன்படுத்தி பலன்களை கூற பயன்படுத்தினார்கள்.
இது காலப்போக்கில் அரசன் முதல் ஆண்டிவரை ஜோதிடம் பார்க்கும் வழக்கமாக மாரிவிட்டது.
ஜோதிடத்தில் எத்தனை முறைகள் உள்ளன?
1) வாக்கிய ஜோதிடம் இந்த முறை ஜோதிடத்தின் ஆரம்பநிலை இது அவரவர் சந்ததிகளுக்கு வாய்வெளியே கற்றுத்தந்த முறை, இந்த முறையைத் தழுவியே நமது இந்து கலாச்சாரத்தில் சடங்கு, சம்ரதாயங்கள், விழாக்கள், யாகங்கள் செய்துவந்தனர். வாக்கிய முறையில் ஒரு ராசிக்குள் கிரகங்கள் எங்கிருந்தாலும் ஒரு ராசியாக பயன்படுத்தினார்கள், இவர்கள் பாவ கணிதங்களை பயன்படுத்தவில்லை. இது காலத்தால் உருக்குழைந்து போகும் நிலைக்கு மாறிக்கொண்டிருந்த அதே வேளையில் புதிய முறை உறுவானது.
2) திருக்கணிதம் என்ற புதியமுறை உருவானது, பாரம்பரிய முறையில் சொல்லப்பட்ட கணித முறைகளை நவீன விஞ்ஞான அடிப்படையில் கணித சுத்தம் செய்து திருத்தி அமைக்கப்பட்ட கணிதம் என்பதை திருக்கணிதம் என்று அழைக்கப்பட்டது.
திருக்கணித முறையில் சமஅளவு பாவ கணிதமுறைகளை பயன்படுத்தி பாவ நிலைகளுக்குள் உள்ள கிரகங்களே அந்த பாவ பலன்களை தருகின்றன் என்ற புதிய கோட்பாடுகளை உறுவாக்கினார்கள்.
பாரம்பரியம் மற்றும் திருக்கணிதம் இரண்டு முறையும் லக்னம் மற்றும் சந்திரன் இரண்டுக்கும் முக்கியத்துவமாக எடுத்து சந்திரனை வைத்து தசா கணிதமுறையை பயன்படுத்தியுள்ளனர். கிரகநிலை மற்றும் லக்ன கணிக்க முன்னோhகள் நிராயன முறையை பயன்படுத்தியுள்ளனர்.
3) மேல்நாட்டு ஜோதிட முறையில் லக்ன கணிதம் பின்பற்றியுள்ளனர், தசா கணிதம் பின்பற்றவில்லை இவர்கள் சூரியனின் கோச்சார நிலையைக் கொண்டு பலன்கள் தீர்மானிக்கின்றனர். இவர்கள் லக்னம் மற்றும் கிரகநிலைகளை கணிதம் செய்ய சாயன முறையை பயன்படுத்துகின்றனர்.
மேல் நாட்டு ஜோதிட முறையில் பாவ கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் கிரக பார்வை மற்றும் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
4) பி.வி.ராமன் முறை பாரம்பரியம் மற்றும் திருக்கணித முறையில் உள்ள கருத்துக்களை எடுத்துக்கொண்டு பாவ கணிதத்தை எடுத்து பாவ ஆரம்பம், மத்தி, முடிவு என்ற புதிய கோட்பாடுகளை உறுவாக்கினார் இதில் பாவ ஆரம்பமுதல் பாவ மத்திக்குள் உள்ள கிரகங்கள் வலிமையான பலன் தரும், மத்திமுதல் முடிவு வரை உள்ள கிரகங்கள் வலிமை குன்றிய பலன்களை தருவதாகவும் மேலும் 108 வகையான யோகங்களையும், 108 வகையான தோசங்களை முன்னிலைப்படுத்தி பலன்கள் கூறப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து ஜோதிட முறையிலும் 27 நட்சத்திரங்களை 108 பாதங்களாக பிரித்து பயன்படுத்தி வந்தனர்.
5) கோபால கிருஷ்ணாராவ் (மீனா) முறை முன்பிருந்த ஆய்வாளர்களை விட ஒருபடி முன்னோக்கிய சிந்தனையாளர் மீனா அவர்கள் 27 நட்சத்திரங்களை 108 பாதங்களாக நாம் பிரிப்பதால் நான்கு பாதங்களுக்கும் ஒருகிரகத்தின் ஆதிபத்யம் பெருகின்றது இது நமது பயன்பாட்டுக்கு சாதகமாக அமையவில்லை இதையே நாம் நட்சத்திரங்களை விம்சோத்தரி கணித முறையை பயன்படுத்தி புத்திகளாக பிரிக்க முற்பட்டு ஒரு நட்சத்திரத்திற்கு 9பது புத்திகள் என்பதால் 9பது விதமான ஆதிபத்யத்தை பயன்படுத்தலாம் என 9பது கிரகத்திற்கும் சொந்தமான 27 நட்சத்திரங்களுக்கும் 9பது புத்திகள் வீதம் 243 புத்திகள் என பகுத்தார்.
இந்த 243 புத்திகளை வைத்து கிரகங்கள் நின்ற பாகையை கொண்டு கிரகம் நின்ற நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரத்தை எடுத்து நட்சத்திரத்தை விட உபநட்சத்திரமாக அமையும் கிரகம் வழிமையானது என்றுகூறினார். இந்த முறையை கொண்டு இவர் மீனா நாடி என்ற புதிய முறையை உறுவாக்கினார்
பலன் கூறும் முறைக்கு பாரம்பரியம் மற்றும் திருக்கணித முறையில் உள்ள கருத்துக்களையும் கணிதமுறைகளையும் பயன்படுத்தினார்.
6) கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை இதில் பாவ ஆரம்பம், மத்தி, முடிவு என்ற கொள்கையை ஒதுக்கிவிட்டு பாவ ஆரம்பமுனைதான் முக்கியம் என்ற கொள்கையை உறுவாக்கினார். இவர் சமபாவ கணித முறையை ஒதுக்கிவிட்டு, மேலை நாட்டினர் பயன்படுத்தும் பிளசீடியஸ் பாவ கணிதமுறையையும், நியூகோம்ப் அயனாம்சத்தையும் பயன்படுத்தி பாவ கணிதத்தை சீர்படுத்த முற்பட்டார், அதன் விளைவாக கோபால கிருஷ்ணராவ் அவர்கள் 243 புத்திகள் நட்சத்திரங்களை எடுத்து பிரித்தோமானால் சரியாக அமையும்.
பாவ கணிதம் கணிக்கும்போது வாணவீதியை 12 ராசிகளாக 30 பாகை இடைவெளியில் பகுக்கும் போது கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் உள்ள ராகு புத்தி இரண்டாக பிரிந்து இரண்டு ராசிகளில் அமைகின்றது.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் உள்ள சந்திர புத்தி இரண்டாக பிரிந்து இரண்டு ராசிகளில் அமைகின்றது. இதன் காரனமாக 243 புத்திகளுடன் மேற்கண்ட ஆறு நட்சத்திரங்களில் உள்ள 6 புத்திகளை சேர்க்க வேண்டும் என கூறி 249 புத்திகள் என பகுத்தார்.
இந்த 249 புத்திகளை உபநட்சத்திரம் என அழைத்தார். இந்த உபநட்சத்திர கோட்பாடுகளை வைத்து கிரகம் மற்றும் பாவங்களின் பாகை கலையை வைத்து நட்சத்திரம் மற்றும் உபநட்த்திரத்தை எடுத்து அட்டவணை படுத்தினார்.
அதன் பின் பாரம்பரியம் மற்றும் திருக்கணித முறையில் பாவ அதிபதிகளை வைத்து நாம் பலன் கூறும்போது இரண்டு மணி இடைவெளியில் பிறந்த அனைவருக்கும் பாவ அதிபதி ஒன்றாகத்தான் அமையும் அதை வைத்து பலன் கூறுவது சரியான பலனாக அமையாது என்பதால்.
பாவ ஆரம்பமுனை ஒரு நட்சத்திரத்தில், அதில் ஒரு உபநட்சத்திரத்தில் அமைகின்றது. பாவம் இரன்டுமணி நேரத்திற்கு ஒன்றாக அமைகின்றது, நட்சத்திரம் சுமார் ஒரு மணி இடைவெளியில் அமைகின்றது, உபநட்சத்திரம் சுமார் 2 நிமிடம் முதல் 12 நிமிடம் வரை அமைவதால் நாம் உபநட்சத்திரத்தை எடுப்பதே சரியானது என்ற கொள்கையை உருவாக்கி ஜோதிட உலகத்தில் புதிய ஜாதக கணிதம் கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்ற புதிய முறையை உறுவாக்கினார்.
இந்த முறையில் இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு ஜாதகம் கணிக்க இயலும் என்றுகூறினார்.  அதன் பின் ஒரு கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி எந்த பாவத்தில் அமர்ந்துள்ளாரோ அந்த பாவத்தின் பலன்களை தரும் எனக்கூறி இந்தக் கருத்தை மையமாக வைத்து அட்டவணை படுத்தினார்.
1) பாவத்தில் அமர்ந்த கிரகம்
2) பாவத்தில் அமர்ந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் உள்ள கிரகங்கள்
3) பாவ அதிபதியின் நட்சத்திரத்தில் உள்ள கிரகங்கள்.
4) பாவ அதிபதி ஆகிய நான்கு நியதிகளைக் கொண்டு பாவ குறிகாட்டிகள் அட்டவணையை உறுவாக்கினார், இதன் அடிப்படையில் பாவங்கள் செயல்படுகின்றன என்று கூறினார்.
இந்த குறிகாட்டிகள் அட்டவணை இரட்டை குழந்தைக்கு இருவித அட்டவணை அமையாத காரணத்தால் இரண்டு பலன்கள் கூற இயலவில்லை என்பதால் பயன்பாடற்றுப்போனது.
அதன்பின் பலன் கூறும் முறைக்கு நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய முறையில் உள்ள அதே கருத்துக்களான கிரககாரம், பாவகாரகம், கிரகம், கிரகம் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், நீசம், பகை, வக்கிரகதி போன்றவைகளை பயன்படுத்தினார், ஆனால் இந்த கருத்துக்களை வைத்து பலன்கள் கூற ஏதுவாக அமையவில்லை.
கணிதத்தை நவீனப்படுத்தி பலன் கூறும் முறையை நவீனப்படுத்த இயலாமல் அவரது காலம் முடிந்தது அதன்பின் இந்த முறையை பலர் ஆய்வுகள் செய்யும் போதும் பழைய மரபுமுறை கருத்துக்களையே புகுத்தி பார்த்ததில் அவைகள் பலன்கள் கூற ஒத்துவரவில்லை என்பதால் மேலும் வளர்சியின்றி முழுமை பெறாமல் போனது.
இதன் காரணமாக இரட்டை குழந்தைக்கு இரண்டு ஜாதகம் கணிக்க முடிந்தது, இரண்டு தசா புத்தி பலன்கூற இயலவில்லை.
இதுவரை ஆய்வு செய்த ஜோதிட ஆய்வுகள் அனைத்தும் லக்னம் சார்ந்தே அனைத்து விசயங்களையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதை கூறிக்கொண்டு அடுத்தமுறைக்கு செல்வோம்.
7) பாஸ்கரா முறை கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில் உள்ள பிளசீடியஸ் பாவ கணித முறை, நியுகோம்ப் அயனாசம், 249 உபநட்சத்திரங்களையும், பாரம்பரிய முறையில் உள்ள அடிப்படை கூறுகளான 12 ராசி, 27 நட்சத்திரம், 9பது கிரகங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், நீசம், பகை, வக்கிரகதி முதலியவைகள் விம்சோத்தரி தசா புத்திக்கு தொடர்பில்லாத காரணத்தால் இவைகளை எடுத்துக்கொள்ளவில்லை.
பாஸ்கரா முறையில் உள்ள நவீன கருத்துக்கள் மற்றும் ஆய்வுகள்.
1. ஆளுங்கிரகங்களைக் கொண்டு, கேள்வி குறிப்பிடும் பாவங்களைப் பொருத்து பிறந்த நேரத்தை 
 துல்லியமாக்குதல் அதாவது நடப்புச் சந்திரன் நிலையை பிறப்பு லக்னத்துடன் இணைத்தல், நடப்பு 
 லக்ன நிலையை பிறப்பு ராசியுடன்; இணைப்பது என்ற கருதுகோளை உருவாக்கித் தெளிவுபடுத்தியது.
2. பாவமுனை உள் தொடர்புகள் என்ற புதிய கோட்பாடுகள்.
3. லக்னம் சார்ந்தது மற்றும் லக்னம் சாராதது என்ற புதிய கொள்கை.
4. ஒருவர்சார்ந்த, இருவர் சார்ந்த மற்றும் பலர் சார்ந்த காரகங்கள், பாவங்கள்.
5. எட்டுவிதமான சூத்திரங்கள் ஜோதிடத்தில் புதிய கண்டுபிடிப்பு.
6. கொடுப்பினை எனும் புதிய சொல்லாக்கமும் பொருளும்.
7. பாவ காரகங்களை பிற 11 பாவங்களுக்கு பகுத்தல்.
8. கிரக காரகங்களை பாவகாரகங்களாக பகுத்தல்.
9. காலச்சக்கர விதிகளும் அவற்றின் பகுப்பு முறைகளும்.
10. இராகு, கேது என்னும் சாயா கிரகங்களுக்கு 12 பாவ ரீதியான காரகங்களைத் தொகுத்தல்.
11. சில கேள்விகளுக்கு புதிய பாவங்களை அடையாளங் காட்டியிருத்தல் – உதாரணமாக 9ம் பாவம் இரண்டாம் 
 திருமணம், 12ம் பாவம் இரண்டாவது தொழில்.
12. அயனாம்சங்கள் பகுப்பு முறைகளை பற்றிய குழப்பங்களைத் தெளிவுபடுத்தியது.
13. நகரும் சந்திரன் பற்றிய ஆய்வுகளை முழுமைபடுத்தியது.
14. தசா புத்தி பலன் கூறும் வழிமுறைகள்.
15. பாவ கூட்டு விளைவுகள் குறித்த தற்போதய ஆய்வு முடிவுகள்.
16. சந்திரனை பயன்படுத்தி ஆரூட பலன் கூறுதல்.
17. சூத்திரத்தின் அடிப்படையை வைத்து கேள்விக்குரிய பாவங்களை பயன்படுத்துதல்.
18. சூத்திரத்தின் அடிப்படையை வைத்து நல்ல நேரங்களை தேர்வு செய்தல்.
19. சூத்திரத்தின் விதிகள் மற்றும் விதிவிலக்குகள்.
20. அனைவரும் ஒரேமாதிரியான பலன் கூறும் முறையில் ஒழுங்கு.
21. மணிக்கணக்கில் பன் கூறும் முறைகள் மற்றும் பல புதிய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.
பாஸ்கரா முறையில் ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மையானது, ஒரு ஜாதகத்தை போல வேரொரு ஜாதகம் இல்லை என்ற அடிப்படை தத்துவத்தில் உறுவானது.
இந்த முறையில் விஞ்ஞான அடித்தளத்தில் உறுவாக்கப்பட்ட முறை, இம்முறை குறுகிய காலத்தில் பயிற்சிபெற்று பலன் கூறஇயலும், ஒரு சம்பவம் நிகழும் காலங்களை நிற்ணயிக்க இயலும். வருங்காலத்தில் நிகழும் சம்பவங்களை முன் கூட்டியே அறிய உதவுகின்றது.
பாஸ்கரா ஜோதிடமுறை வருங்காலங்களில் ஒவ்வொரு துறையிலும் அவரவர்கள் பகுத்து ஆய்வு செய்ய ஒவ்வொரு துறையிலும் ஜோதிடம் தலைத்து நிற்கும் மற்றும் கல்லூரிகளில் முக்கிய பாடத்திட்டமாகும் அமைப்புகள் உள்ளன.
வீட்டுக்கு ஒருவர் பாஸ்கரா முறையை பயிலும் காலம் வெகு தொலைவில் இல்லை. இனி ஜோதிடத்தின் அடுத்த பரினாம வளர்ச்சிக்கு இந்த முறையை தவிர்த்தோ செல்ல இயலாது என்பது தின்னம்.
அனைவரும் பயின்று தனது விதியை தெரிந்து இன்பமான வாழ்;க்கை வாழ வழிவகுக்கும் மற்றும் எது கிடைக்கும் எது கிடைக்காது என்பதை அறிந்து வாழலாம்.
ஜோதிடம் மணித வாழ்க்கைக்கு அவசியமானதா?
ஒவ்வொரு மணிதனும் தனது வாழ்க்கையில் தான் முன்னெடுத்துவைக்கும் அனைத்து செயல்களும் நன்மை, தீமை மற்றும் மத்திபம் ஆகிய செயல்களையே நாம் அன்றாடம் சந்தித்து வருகின்றோம்
என்பதே உண்மை.
இந்த மூன்று செயல்களை நாம் காத்தல், படைத்தல், அளித்தல் போன்றவைகள் இந்த பிரபஞ்ச ஆற்றல் என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். இந்த பிரபஞ்ச ஆற்றல் பல்வேறு ஆற்றல்களைக் கொண்டது இதையே நமது முன்னோர்கள் காலம், தேசம், வர்த்தமானம் என்பார்கள்.
காலம் என்பது நான்கு பருவங்களைக் கொண்டது கோடைகாலம், வசந்தகாலம், இளவேனிற்காலம், குளிர்காலம் ஆகிய நான்கு பருவங்களைக் கொண்டது. இந்த நான்கு பருவங்களும் அனைத்து தேசங்களிலும் ஒன்றாக அமைவதில்லை,
பூமத்திய ரேகையிலிருந்து 0 பாகை முதல் 30 பாகை வரை மேலும் கீழும் உள்ள 60 பாகை இடைவெளியில் உள்ள தேசங்களில் நான்கு பருவங்களை உணர முடிகின்றது.
பூமத்திய ரேகையிலிருந்து 30 பாகை முதல் 60 பாகை வரை மேல்பகுதி மற்றும் கீழ்பகுதிகளில் உள்ள 30 பாகை இடைவெளியில் உள்ள தேசங்களில் மூன்று பருவங்களை உணர முடிகின்றது.
பூமத்திய ரேகையிலிருந்து 60 பாகை முதல் 90 பாகை வரை மேல்பகுதி மற்றும் கீழ்பகுதிகளில் உள்ள 30 பாகை இடைவெளியில் உள்ள தேசங்களில் இரண்டு பருவங்களை உணர முடிகின்றது.
இந்த பருவங்களின் வேறுபாடுகளால் ஒவ்வொரு தேசங்களின் பருவ மாற்றத்தின் மூலம் தாவரங்கள் உருவாகின்றது. இந்த தாவரங்களை நவ கிரகங்கள் ஆளுமை செய்கின்றது.
சூரியன் தாவரங்களுக்கு பச்சையத்தை வழங்கியுள்ளது.
சந்திரன் நீரை வழங்குகியுள்ளது.
செவ்வாய் பூமியில் உள்ள மண்னை வளங்கியுள்ளது.
ராகு வாயுக்களை வளங்கியுள்ளது.
குரு விதைகளை வளங்கியுள்ளது.
சனி கார்பனை வளங்கியுள்ளது.
புதன் வேருபாடான மண்னை வளங்கியுள்ளது.
கேது வேருபாடான உப்பை வளங்கியுள்ளது.
சுக்கிரன் பயனுல்ல அல்லது பயனற்றவைகளை வழங்குகின்றது.
இவ்வாறு நவகிரகங்களின் ஆளுமை மண்ணில் ஏற்பட்டு, இந்த மண் மூலம் தாவரங்கள் உறுவாகின்றது.
மீண்டும் அடுத்த பரினாமத்தில் ஒரு தாவரத்தை நவகிரகங்கள் ஆளுமை செய்கின்றது.
ஆண் மரத்தை செவ்வாய் ஆண் மரத்தை
பெண் மரத்தை சுக்கிரன் ஆளுகின்றார்.
விதையை குரு ஆளுகின்றார்.
மரத்தின் வழற்சியை சூரியன் ஆளுகின்றார்.
வேர்களையும், இலைகளையும் புதன் ஆளுகின்றார்.
மரத்தில் உள்ள நார்களை சனி ஆளுகின்றார்.
மரப்பட்டையை ராகு ஆளுகின்றார்.
மரத்திற்கு தேவையான உரத்தை கேது ஆளுகின்றார்.
மரத்தில் உள்ள ஈரத்தை சந்திரன் ஆளுகின்றார்.
இவ்வாறு நவகிரகங்கள் தாவரங்களை ஆளுமை செய்து நமக்கு காய், கணிகலாக பயன் தருகின்றது.
இந்த தாவரங்கள் மூலம் இந்த புவியில் உள்ள உயிரிணங்களை இருவிதமாக ஆட்டுவிக்கின்றன.
1) கீரை, காய், கணி, தானியங்கள் மூலம் நமக்கு உணவாக பயன்படுகின்றது.
2) சூரிய உதயம் முதல் அஸ்த்தமனம் வரை தாவரங்கள் சூரியனின் ஒளிச்சேர்க்கையால் பகலில் தாவரங்கள் கார்பண்டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்ஜிசனை வெளிவிடுவதால் உயிரினங்கள் ஆக்ஜிசனை சுவாசித்து கார்பண்டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. இதன் காரணமாக உயிரினங்கள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.
இரவில் தாவரங்கள் ஆக்ஜிசனை உள்வாங்கி கார்பண்டை ஆக்சைடை வெளிவிடுவதால் உயிரினங்கள் கார்பண்டை ஆக்சைடை அதிகமாக சுவாசிப்பதால் தூக்கம் வருகின்றது.
இதைப்போல இந்தப் புவியில் வாழும் மானிடர்களை நவக்கிரகங்கள் ஆளுமை செய்கிறது. இந்த நவகிரகங்களும் ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினத்தை இருவகையாக செயல்படுகின்றது.
பிறந்த குழந்தை முதல் தவழும் குழந்தைகளை புத்திர காரகனாக குரு ஆளுமை செய்கிறது.
நடக்கும் பருவம் முதல் பள்ளிப்படிப்பு வரை உள்ள குழந்தைகளை கள்விக் காரகனாக புதன் ஆளுமை செய்கின்றது.
பருவமடைந்த திருமணமாகத பெண்களை களத்திர காரகனாக சுக்கிரன் ஆளுமை செய்கின்றது.
பருவமடைந்த திருமணமாகாத ஆண்களை களத்திர காரகனாக செவ்வாய் ஆளுமை செய்கின்றது.
திருணமாகி குழந்தை பெற்ற பெண்களை தாய் காரகமாக சந்திரன் ஆளுமை செய்கின்றது.
திருணமாகி குழந்தை பெற்ற ஆண்களை தந்தை காரகமாக சூரியன் ஆளுமை செய்கின்றது.
தான் பெற்ற பிள்ளை, தனக்கு ஒரு குழந்தை பெற்றவுடன் பெண்  பாட்டி காரகமாக கேது ஆளுமை செய்கின்றது.
தான் பெற்ற பிள்ளை, தனக்கு ஒரு குழந்தை பெற்றவுடன் ஆண் பாட்டன் காரகமாக ராகு ஆளுமை செய்கின்றது.
பாட்டன், பாட்டி காரகத்திலிருந்து வயோதிக காலத்தில் வயோதிக காரகமாக சனி ஆளுமை செய்கின்றது.
மேற்கண்டவாறு நவகிரகங்கள் ஒவ்வொரு மணித வாழ்கையையும் ஆதிக்கம் செலுத்தி நம்மை ஆட்டுவிக்கின்றன.
இதுபொல் தனிமணிதனை தனது விதிக் கொடுப்பினை (பாவம்), மதிக் கொடுப்பினை (தசாபுத்தி), கதிக் கொடுப்பினை (கோச்சாரம்) மூலம் ஒவ்வெரு மணிதனையும் ஆட்டுவிப்பதால் ஜோதிடம் மணித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. என்று கூறிக்கொள்கிறேன்.
நன்றி